அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமானது மீள் நிரப்பக் கூடிய வகையில் உலோக மின்கலனுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த வினையூக்கியைத் தயாரித்துள்ளது.
அதில் பயன்படுத்தப்படும் இந்த வினையூக்கி ஆனது மீன் செவுள்களிலிருந்து தயாரிக்கப் பட்டுள்ளது.
இது குறைந்த செலவு கொண்டதாகவும் ஆற்றலை மாற்றும் சாதனங்களில் பயன்படுத்தும் தன்மை உடையதாகவும் உள்ளது.
இது உலோக – காற்று மின்கலன், எரிபொருள் கலன் மற்றும் உயிரி எரிபொருள் போன்ற சேமிப்புத் தொழில்நுட்பங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றது.