TNPSC Thervupettagam

மீவுளிர் விண்முகில் LSQ14 fmgன் வெடிப்பு

September 15 , 2020 1443 days 716 0
  • சமீபத்தில் ஒரு வழக்கமற்ற மீவுளிர் விண்முகில் வெடிப்பானது (supernova explosion) பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உணரப்பட்டது.
  • இந்த வெடிக்கும் நட்சத்திரமானது LSQ14fmg மீவுளிர் விண்முகில் வெடிப்பு என அழைக்கப் பட்டது.
  • இது மிகவும் மெதுவாக ஒளிர்வானதாக மாறியது. இது இதற்கு முன்னர் எப்பொழுதும் நிகழ்ந்திராத வகையில் நிகழ்ந்த பிரகாசமான வெடிப்புகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது.
  • இந்த வெடிக்கும் நட்சத்திரமானது டைப் Ia மீவுளிர் விண்முகில் எனப்படுகின்றது. அதிலும் குறிப்பாகசூப்பர் சந்திரசேகர் குழுவின்உறுப்பினராகவும் இது கருதப் படுகின்றது.
  • டைப் Ia மீவுளிர் விண்முகிலானது இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான ஒன்றாக ஒரு முக்கியக் கூறாக விளங்குகின்றது.
  • இருண்ட ஆற்றல் ஒரு அறியப்படாத ஆற்றலாக விளங்குகின்றது. இது தற்போதைய பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்குக் காரணமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்