TNPSC Thervupettagam

முகப்புரை குறித்து உச்ச நீதிமன்றம்

December 2 , 2024 31 days 123 0
  • அரசியலமைப்பு சட்ட ஆவணத்தின் முகப்புரையில் 'சமதர்மம்' மற்றும் 'மதச்சார்பு அற்ற தன்மை' போன்ற சொற்கள் சேர்க்கப்பட்டதன் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இந்தச் சொற்கள் ஆனது பாராளுமன்றத்தின் 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நாற்பத்தி-இரண்டாவது திருத்தம்) சட்டத்தின் (42வது திருத்தம்) மூலம் அவசரநிலை பிரகடன காலத்தில் முகப்புரையில் சேர்க்கப்பட்டன.
  • இந்த 42வது திருத்தம் ஆனது, பெரும்பாலும் ‘குறு அரசியலமைப்பு’ என்று குறிப்பிடப் படுகிறது.
  • ஏராளமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்தத் திருத்தம் ஆனது மத்திய அரசின் அதிகாரங்களை பெரிதும் விரிவுபடுத்தியது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், டாக்டர் பல்ராம் சிங் என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ‘சமதர்மம்’ மற்றும் ‘மதச் சார்பற்றது’ போன்ற சொற்களைச் சேர்ப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்