அரசியலமைப்பு சட்ட ஆவணத்தின் முகப்புரையில் 'சமதர்மம்' மற்றும் 'மதச்சார்பு அற்ற தன்மை' போன்ற சொற்கள் சேர்க்கப்பட்டதன் செல்லுபடித் தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தச் சொற்கள் ஆனது பாராளுமன்றத்தின் 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (நாற்பத்தி-இரண்டாவது திருத்தம்) சட்டத்தின் (42வது திருத்தம்) மூலம் அவசரநிலை பிரகடன காலத்தில் முகப்புரையில் சேர்க்கப்பட்டன.
இந்த 42வது திருத்தம் ஆனது, பெரும்பாலும் ‘குறு அரசியலமைப்பு’ என்று குறிப்பிடப் படுகிறது.
ஏராளமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்தத் திருத்தம் ஆனது மத்திய அரசின் அதிகாரங்களை பெரிதும் விரிவுபடுத்தியது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், டாக்டர் பல்ராம் சிங் என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ‘சமதர்மம்’ மற்றும் ‘மதச் சார்பற்றது’ போன்ற சொற்களைச் சேர்ப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.