TNPSC Thervupettagam

முக்கியத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி

October 5 , 2023 416 days 337 0
  • இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் 12.1% அதிகரித்தது.
  • இந்த எட்டு முக்கியத் துறைகளிலும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உற்பத்தி வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • 14 மாத கால சீரற்றப் போக்குகளுக்குப் பிறகு இந்தத் துறைகளில் உற்பத்தி உயர்வுப் பதிவானதையடுத்து தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP) இவற்றின் பங்கு சுமார் 40% ஆக உள்ளது.
  • ஆகஸ்ட் மாதத்தில், சிமெண்ட் உற்பத்தியானது 18.9% வளர்ச்சியடைந்த நிலையில் இது  2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
  • ஆகஸ்ட் மாதத்தில் 1.8% வளர்ச்சியுடன், ஒரு வருடத்தில் மிகவும் குறைந்த வளர்ச்சி விகிதத்தினைப் பதிவு செய்த ஒரே துறை உர உற்பத்தித் துறை மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்