மார்ச் மாதத்தில் முக்கியத் தொழிற்துறைகளின் உற்பத்தியானது 6.5% என்ற அளவில் குறைந்துள்ளது.
இந்தத் தரவானது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட முதல் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
கச்சா எண்ணெய், எஃகு, இயற்கை வாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருள், சிமெண்ட், உரங்கள், மின்சாரம் மற்றும் நிலக்கரி ஆகியவை இந்தியாவின் முக்கியத் தொழில்துறைகளாகும்.
முக்கியமான 8 துறைகள் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டில் (IIP - Index of Industrial Production) 40.27% அளவைக் கொண்டுள்ளன.
IIP ஆனது மத்தியப் புள்ளியியல் அமைப்பால் வெளியிடப்படுகின்றது.
IIP குறிகாட்டியானது சுரங்கத் துறை, மின்சாரம் மற்றும் உற்பத்தி ஆகிய மூன்று முக்கியமான துறைகளை அளவிடுகின்றது.
IIP ஆனது 2004-05 ஆண்டை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுகின்றது.