TNPSC Thervupettagam

முக்கியப் பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்

May 26 , 2022 786 days 426 0
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகமானது, 2021-22 ஆம் ஆண்டிற்கான முக்கிய விவசாயப் பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்திய நாட்டின் உணவுத் தானிய உற்பத்தியானது 314.51 மில்லியன் டன்களாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • இது சாதனை அளவை எட்டியதாக உள்ளது.
  • இது 2020-21 ஆம் ஆண்டில் பதிவான உணவு தானிய உற்பத்தியை விட 3.77 மில்லியன் டன்கள் அதிகமாக உள்ளது.
  • 2016-17 முதல் 2020-21 வரையிலான முந்தைய ஐந்து ஆண்டு காலத்துடன் ஒப்பிடச் செய்கையில், 2021-22 ஆம் ஆண்டின் சராசரி உணவு தானிய உற்பத்தியானது 23.80 மில்லியன் டன்கள் அதிகமாக இருந்தது.
  • மக்காச்சோளம், அரிசி, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கடுகு வகை, உளுந்து, கரும்பு மற்றும் கடுகு ஆகியவற்றின் உற்பத்தியில் சாதனை அளவிலான உற்பத்தியானது பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்