இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமானது 2017-2018 ஆம் நிதியாண்டில் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து 2018-19 ஆம் நிதியாண்டில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளின் மோசமான செயல்திறன்களே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
2014-15 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் இதுவேயாகும்.
மேலும் மத்தியப் புள்ளியல் துறை அலுவலகமானது வேலையின்மை விகிதத் தரவையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி வேலையின்மை விகிதமானது கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்ச அளவான 6.1 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள தரவின் படி நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.39 சதவீதமாக (6.45 லட்சம் கோடி) உள்ளது