TNPSC Thervupettagam

முக்கியப் பொருளாதார குறியீடுகள்

June 7 , 2019 2000 days 701 0
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமானது 2017-2018 ஆம் நிதியாண்டில் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து 2018-19 ஆம் நிதியாண்டில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளின் மோசமான செயல்திறன்களே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
  • 2014-15 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் இதுவேயாகும்.
  • மேலும் மத்தியப் புள்ளியல் துறை அலுவலகமானது வேலையின்மை விகிதத் தரவையும் வெளியிட்டுள்ளது.
  • இதன்படி வேலையின்மை விகிதமானது கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்ச அளவான 6.1 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
  • பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள தரவின் படி நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.39 சதவீதமாக (6.45 லட்சம் கோடி) உள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்