மின்னணுத் தரவு தளங்களை சேதப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விசாரணையின் போது தக்கத் தரவை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது அதிக அளவு அபராதங்களை விதிக்க 2019 ஆம் ஆண்டின் நிதி மசோதாவானது செபிக்கு (SEBI) அதிகாரமளித்துள்ளது.
அபராதமானது 10 கோடி வரை அல்லது சட்ட விரோதமான ஆதாயங்களின் மூன்று மடங்குத் தொகை இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை விதிக்கப்படும்.
தனிப்பட்டத் தரகர்களுக்கு ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.
இந்த நடவடிக்கையானது கட்செவி அஞ்சல் மற்றும் இதர டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் விலைத் தகவல் மற்றும் பிற முக்கிய தரவுகளின் அங்கீகாரமற்ற கசிவைத் தடுப்பை நோக்கமாகக் கொண்டது.