TNPSC Thervupettagam

முக்கிய கனிமங்களுக்கான உரிமத் தொகை விகிதங்கள்

October 16 , 2023 279 days 210 0
  • லித்தியம், நியோபியம் மற்றும் அருமண் தனிமங்கள் (REEs) ஆகியவற்றிற்கான உரிமத் தொகை விகிதங்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
  • இது லித்தியம் மற்றும் நியோபியம் ஆகியவற்றிற்கு தலா 3% ஆகவும், அதே சமயம் அருமண் தனிமங்களுக்கு (REEs) 1% ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இதற்காக, 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தச் சட்டத் திருத்தத்திற்கு முன், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் இரண்டாவது பட்டியலானது, குறிப்பாக உரிமத் தொகை நிணயிக்கப்படாத அனைத்து கனிமங்களுக்கும் அதன் சராசரி விற்பனை விலையில் 12% உரிம த்தொகை விகிதத்தை வழங்குவதைக் கட்டாயமாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்