TNPSC Thervupettagam

முக்கிய துறைமுக அணுகலுக்கான ஒப்புதல்

September 19 , 2018 2164 days 582 0
  • வங்காள தேச அமைச்சரவையானது அந்நாட்டின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களின் வழியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை அந்நாட்டின் உள்ளேயும் வெளியேவும் எடுத்து செல்வதற்கான வரைவு ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
  • வங்காளதேசப் பிராந்தியங்களில் சரக்குப் போக்குவரத்திற்கு அந்நாட்டு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • இந்தியப் பொருட்கள் கீழ்க்காணும் நான்கு பகுதிகள் வழியாக நுழைய முடியும்.
    • ஹவுரா (வங்காள தேசம்) மற்றும் அகர்தலா (திரிபுரா, இந்தியா)
    • தமபில் (சில்ஹெட், வங்காள தேசம்) மற்றும் டௌகி (மேகாலயா)
    • ஷியோலா (சில்ஹெட்) மற்றும் சுடர்கண்டி (அசாம்)
    • பிபீர்பஜார் (குமிலா) மற்றும் ஸ்ரீமந்தபூர் (திரிபுரா)
  • இதன்கீழ், சுங்க வரி , வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தம் மற்றும் வங்காள தேசக் கட்டுப்பாடுகளை இந்தியா பின்பற்ற வேண்டும்.
  • இந்த ஒப்பந்தமானது ஐந்து வருடங்களுக்கு அமலில் இருக்கும். ஆனால் இது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தானாக நீட்டிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்