- 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய நிதியியல் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஊதிய விதிகள்
- புதிய இழப்பீட்டு விதிகளின் படி, மொத்த ஊதியம் (அ) இழப்பீட்டுத் தொகையில் படித் தொகையானது 50 சதவிகிதத்திற்கு மேல் மிஞ்சக் கூடாது.
- அதாவது அடிப்படை ஊதியமானது 50 சதவீதமாக இருக்க வேண்டும்.
- இந்த விதிக்கு இணங்க முதலாளிகள் சம்பளத்தின் அடிப்படை ஊதியக் கூறுகளை அதிகரிக்க வேண்டும்.
- இதனால் பணிக் கொடைத் தொகை மற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உயர்வு ஏற்படும்.
புதிய தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வரி விதிகள்
- 2021 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 01 முதல் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் பங்களிப்பின் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
- ரூ.2.5 லட்சம் வரையிலான வருங்கால வைப்பு நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்துப் பெறப்படும் வட்டிக்கு தற்போது உள்ள வரி விதிமுறைகளின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
- இருப்பினும் ஏப்ரல் 01 முதல் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டிக்கு (தொழிலாளரின் பங்களிப்பிற்கு மட்டும்) வரி விதிக்கப்படும்.
பொது துறை வங்கிகள் இணைப்பு
- ஏழு பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்குப் புத்தகம் (Pass book) மற்றும் காசோலைப் புத்தகம் (Cheque book) ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும், ஏனெனில் 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் 01 முதல் அவை செயல்படாது.
- அந்த வங்கிகள் விஜயா வங்கி, தேனா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி மற்றும் யுனிடெட் இந்திய வங்கி ஆகியவனவாகும்.
- ஏனெனில் இந்த ஏழு வங்கிகளும் ஏப்ரல் 01 முதல் மற்ற பிற வங்கிகளுடன் இணைக்கப் பட உள்ளது.
- இணைக்கப்பட உள்ள வங்கிகள்,
- தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை பரோடா வங்கியுடனும்,
- ஓரியன்டல் காமர்ஸ் வங்கி மற்றும் யுனிடெட் இந்திய வங்கி ஆகியவை பஞ்சாப் தேசிய வங்கியுடனும்,
- கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் இந்திய வங்கியுடனும்
- அலகாபாத் வங்கியானது இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட உள்ளன.
தானாக பணப்பிடித்தம் செய்வதை வங்கிகள் ரத்து செய்தல்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிமுறைகளின் காரணமாக ஏப்ரல் 01 முதல் டிடிஎச் (DTH), கைபேசி, அகலக் கற்றை, மின்சாரம், தண்ணீர் மற்றும் இதர வசதிகளுக்கான கட்டணங்களைத் தானாக பிடித்தம் செய்யும் முறையை வங்கிகள் ரத்து செய்ய உள்ளன.