இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியான V. இறையன்பு அவர்கள் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நூறு நாட்களுள் மக்களின் குறைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவின் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை தி.மு.க அரசானது நியமித்து உள்ளது.
1993 ஆம் ஆண்டு ஆட்சிப்பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ககன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
R. சண்முக சுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்குரைஞராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞராவார்.
நான்கு புதிய செயலாளர்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய புதிய செயலாளர்களாக, தமிழக அரசானது நான்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமித்துள்ளது.
அந்த நான்கு அதிகாரிகள்
தொல்லியல் துறை ஆணையரான T. உதயச்சந்திரன், முதன்மைச் செயலாளர்,
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரான P. உமாநாத், இரண்டாம் செயலாளர்,
அருங்காட்சியங்களின் ஆணையரான M.S. சண்முகம், மூன்றாம் செயலாளர் மற்றும்
தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் துறை மற்றும் வர்த்தக இயக்குநரான அனு ஜார்ஜ், நான்காம் செயலாளர் ஆவர்.