TNPSC Thervupettagam

முக்கிய நியமனங்கள் – தமிழ்நாடு

May 11 , 2021 1353 days 1525 0
  • இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியான V. இறையன்பு அவர்கள் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நூறு நாட்களுள் மக்களின் குறைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவின் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை தி.மு.க அரசானது நியமித்து உள்ளது.
  • 1993 ஆம் ஆண்டு ஆட்சிப்பணி அதிகாரிகள் குழுவைச் சேர்ந்த மூத்த ஐ..எஸ். அதிகாரியான ககன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • R. சண்முக சுந்தரம் அவர்கள் தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்குரைஞராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞராவார்.

நான்கு புதிய செயலாளர்கள்

  • முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்களுடைய புதிய செயலாளர்களாக, தமிழக அரசானது நான்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமித்துள்ளது.
  • அந்த நான்கு அதிகாரிகள்
    • தொல்லியல் துறை ஆணையரான T. உதயச்சந்திரன், முதன்மைச் செயலாளர்,
    • தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரான P. உமாநாத், இரண்டாம் செயலாளர்,
    • அருங்காட்சியங்களின் ஆணையரான M.S. சண்முகம், மூன்றாம் செயலாளர் மற்றும்
    • தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் துறை மற்றும் வர்த்தக இயக்குநரான அனு ஜார்ஜ், நான்காம் செயலாளர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்