ஜார்கண்ட் மாநில அரசானது மாநிலத்தில் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக முக்பிர் யோஜனா (Mukhbir Yojana) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குழந்தை திருமணத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றவருக்கு அல்லது குழந்தை திருமணங்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க அரசின் ஒற்றராக (Spy) மாறுகின்றவருக்கு 1000 ரூபாய் ரொக்க வெகுமதி (Cash reward) வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ், ஓர் ஒற்றை வருடத்தில் குழந்தைத் திருமண விவகாரங்களே இல்லாத கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
இந்தியாவில் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தை திருமணங்களில் 38 சதவீதத் திருமணங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் நடைபெறுகின்றன.