முடக்கு வாதம் (RA) ஆனது மூட்டுகளில் தொடர் வலியுடன், உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு தன்னுடல் எதிர்ப்பாற்றல் தாக்கு நோயான இதில் உடலானது மூட்டுகளின் புறணிகளை வெளிப்புறத் திசுக்கள் என்று கருதி, அவற்றைத் தாக்கி சேதப் படுத்தச் செய்வதால் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது.
இந்த நோயைப் பற்றிய உலகளாவியப் புரிதலை அதிகரிக்கும் முயற்சியில் முடக்கு வாத நோயாளிகள் அறக்கட்டளையால் இந்த நாள் நிறுவப்பட்டது.