TNPSC Thervupettagam

முதன்மை இடர்பாட்டு அதிகாரி

May 24 , 2019 2014 days 648 0
  • ரூ.5000 கோடிக்கும் மேல் சொத்துகளை வைத்துள்ள வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் ஒரு முதன்மை இடர்பாட்டு அதிகாரியை (CRO - chief risk officer) நியமிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  • சில பெரிய வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் (NBFC - non-banking financial companies) பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது நிதி நெருக்கடிக்கு இட்டுச் செல்லும். (உதாரணம்) ஐஎல் மற்றும் ப்எஸ் (IL&FS) நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி.
  • முதன்மை இடர்பாட்டு அதிகாரியின் தலையாய பணி இடர்பாடுகளை அடையாளம் காணுதல், ஆய்வு செய்தல் மற்றும் அவற்றைத் தடுத்தல் ஆகும்.
  • இவர் NBFC-ன் படிநிலையில் மூத்த அதிகாரியாக இருக்க வேண்டும். இவர் இடர்பாட்டு மேலாண்மைத் துறையில் போதுமான தொழில்சார் தகுதி அல்லது அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்