அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகமானது, சீனா, ரஷ்யா மற்றும் நான்கு இதர பிற நாடுகளுடன் சேர்த்து இந்திய நாட்டினை மீண்டும் ‘முதன்மை கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.
அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பான செயல்முறைகளில் உலகின் மிகவும் சவாலான நாடுகளாக விளங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் அமெரிக்க எல்லையில் கைப்பற்றப்பட்ட போலி மருந்துகளின் மூல ஆதார நாடுகள் சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவையாகும்.