TNPSC Thervupettagam

முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்

July 5 , 2022 874 days 441 0
  • முதன்மை வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது ஐந்து ஆண்டுகளில், செயலில் உள்ள சுமார் 63,000 முதன்மை வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்க முன்மொழிந்துள்ளது.
  • உரங்கள், விதைகள் போன்ற பல்வேறு சேவைகள் மற்றும் உள்ளீடுகளை வழங்கச் செய்வதற்கான இடமாக இது மாறும்.
  • வங்கி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் வங்கி சாராத செயல்பாடுகளுக்கான வழங்கீட்டு நிலையங்களாக முதன்மை வேளாண் கடன் சங்கங்களை உருவாக்க இந்தத் திட்டம் உதவும்.
  • முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் என்பது கூட்டுறவுத் துறையில் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகின்ற, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மிகச்சிறிய அலகு ஆகும்.
  • இது மூன்று அடுக்கு குறுகிய காலக் கூட்டுறவுக் கடன் வழங்கீட்டு அமைப்பின் மிகவும் தாழ்மட்ட நிலையில் உள்ள ஒரு அடுக்கு ஆகும்.
  • இதன் மற்ற இரண்டு நிலைகளில் உள்ள அமைப்புகளாவன: ஏற்கனவே பொது வங்கி மென்பொருளில் செயல்பட்டு வருகின்ற மாநிலக் கூட்டுறவு வங்கிகள் (SCBs) மற்றும்  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் (DCCBs) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்