இந்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை (முதல்வர் மருந்தகங்கள்) திறப்பதற்கு தமிழ்நாடு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவு, அம்மா, மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஔஷாதி மருந்தகங்களில் வழங்கப் படும் விலையை விட மிகவும் குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
இந்த மருந்தகங்கள் ஆனது, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, IMCAPS, DAMCAL, அறுவைச் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துப் பொருட்களோடு 186 வகையான பொதுப் பயன்பாட்டுப் மருந்துகளை விநியோகிக்கும்.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) ஆனது, தரமான மருந்துகளை கொள் முதல் செய்து, மற்ற அரசு மருந்தகங்களை விட 10% தள்ளுபடியில் விற்பனை செய்யும்.
D.Pharm அல்லது B.Pharm கல்விப் படிப்புகளை முடித்த தொழில்முனைவோர் மற்றும் மருந்தாளுநர்களாக உரிமம் பெற்ற தொழில்முனைவோர்கள் முதல்வர் மருந்தகத்தில் வேலைவாய்ப்பு பெற இயங்கலை மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு 3 லட்சம் அரசு மானியம் வழங்கப் படும்.
இதில், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 50% பணமாகவும், 50% மருந்துகளாகவும் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாநில அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என்பதின் கீழ் இது நிறைவேற்றப் படும்.