TNPSC Thervupettagam

முதலாம் தேவராயரின் ஆட்சிக் கால செப்புத் தகடுகள்

April 9 , 2025 13 days 86 0
  • சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலாம் தேவராயரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தச் செப்புத் தகடுகளின் தொகுப்பு ஆனது இந்தியத் தொல்லியல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் மற்றும் நாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள இவை மன்னர் முதலாம் தேவராயரின் முடிசூட்டு விழாவின் போது வெளியிடப்பட்டதால் ஒரு தனித்துவமானதாகக் கருதப்படுகிறது.
  • முக்கியமாக, இந்த முத்திரையில் விஜயநகரப் பேரரசின் அரச சின்னமாக விளங்கிய வழக்கமான வராஹருக்குப் பதிலாக வாமனரின் உருவம் இடம்பெற்றுள்ளது.
  • இந்த செப்புத் தகடுகள் 1406 கி.பி. ஆண்டின் நவம்பர் 05 ஆம் தேதிக்கு இணையான  சாகா 1328 (நாக-சக்சு-குண சசி), வியாயா, கார்த்திகா பா. தசமி (10), வெள்ளிக்கிழமை என்று தேதியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்