TNPSC Thervupettagam

முதலாவது அமைதியான விமானம்

November 29 , 2018 2188 days 662 0
  • மாசசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவன அறிவியலாளர்கள் முதலாவது சுழல் விசிறி அல்லது விசைப்பொறி உருளைகளற்ற அமைதியான விமானத்தை உருவாக்கியுள்ளனர்.
  • உந்து விசை அமைப்பில் எந்த நகரும் பாகங்களும் அற்ற முதல் விமானம் இதுவேயாகும். பறப்பதற்கு புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திராத இந்த விமானமானது சுழல்விசிறி (propellers) அல்லது விசைப்பொறி உருளைகளைக் (turbine blades) கொண்டிருக்காது.
  • தற்போதுள்ள அனைத்து விமானங்களும் சுழல் விசிறிகள், விசைப் பொறி உருளை அலகுகள் போன்ற நகரும் பாகங்களைக் கொண்டு புதைபடிம எரிபொருள் எரிவதன் மூலம் அவை இயங்கும். இவை அதிக அளவில் நீண்ட ரீங்கார ஒலிகளை உருவாக்குகின்றன.
  • இது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரான ‘ஸ்டார் ட்ரெக்’ என்பதன் மூலம் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இது விமானத்திலேயே அமைதியான ஆனால் அயனிகளின் பலமான ஓட்டம் மூலம் அயனியாக்கம் செய்யப்பட்ட காற்று அல்லது மின்னியக்க உந்துவிசை மூலம் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்