TNPSC Thervupettagam

முதலாவது ஆய்வுக் கப்பல் - ஐஎன்எஸ் சந்தாயக்

February 8 , 2024 295 days 267 0
  • இந்தியக் கடற்படையானது, சந்தாயக் எனப்படும் அதன் சமீபத்திய ஆய்வுக் கப்பலை படையில் இணைத்துள்ளது.
  • இது நான்கு ஆய்வுக் (பெரிய) கப்பல்களின் தொடரில் முதல் கப்பலாகும்.
  • இந்தக் கப்பலின் முதன்மைப் பயன்பாடானது துறைமுகம் சார்ந்த பெரும் அணுகுமுறைகளுக்கான விரிவான கடலோர மற்றும் ஆழ்கடல் நீர் பரப்பியல் சார்ந்த ஆய்வுகளுடன் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பெரு வழித்தடங்களைத் தீர்மானிப்பதும் ஆகும்.
  • இந்த கப்பல் ஆனது, கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளைச் சேகரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொது பயன்பாடுகளுக்குச் சேவை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கப்பல் ஆனது, 2021 ஆம் ஆண்டில் படையிலிருந்து நீக்கப்பட்ட பழைய சந்தாயக் கப்பலிலிருந்து தற்போதைய வடிவத்திற்கு மறுவடிவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்