TNPSC Thervupettagam

முதலாவது இந்திய நார்டிக் பால்டிக் மாநாடு

November 8 , 2020 1393 days 579 0
  • இந்த நாடுகள் எதிர்காலத்தில் பசுமை, திறன்மிகு, டிஜிட்டல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டு உள்ளன.
  • நார்வே, டென்மார்க், பின்லாந்து, சுவீடன், ஐஸ்லாந்து ஆகியவை நார்ட்டிக் குழும நாடுகளாகும்.
  • லாத்வியா, லித்வேனியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை பால்டிக் குழும நாடுகள் ஆகும்.
  • லாத்வியா ஆனது புவியியல் ரீதியாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நாடாகும்.
  • லாத்வியா ஆனது “ஆம்பர் வழி” எனப்படும் ஒரு பழமையான பாதையின் மூலம் இணைக்கப் பட்டுள்ளது.
  • இது முன்பு பால்டிக் மற்றும் வடக்கு கடல் போன்ற கடலோரப் பகுதிகளிலிருந்து ஆம்பர் என்ற பொருளை (பிசின் பொருள்) மத்தியத் தரைக் கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தியதால் “ஆம்பர் வழி” என்று அழைக்கப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் நார்டிக்கின் முதலாவது மாநாடானது சுவீடனில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்