தமிழ்நாடு அரசு மற்றும் பந்தய மேம்பாட்டு பிரைவேட் லிமிடெட் (RRPL) ஆகியவை இணைந்து இரவு நேரப் பந்தயங்களை நடத்துவதற்கான ஒரு புதிய சாலைப் பந்தயச் சுற்றமைப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியாவில் இரவு நேரப் பந்தயத்தை நடத்தச் செய்வதற்கான முதலாவது சாலைப் பந்தயச் சுற்றமைப்பு இதுவாகும்.
F4 இந்தியச் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியப் பந்தயப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளை நடத்தும் வகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.
RRPL என்ற நிறுவனமானது இந்தியப் பந்தயப் போட்டி மற்றும் F4 இந்திய சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றின் விளம்பர தாரராகவும் உள்ளது.