உலகின் மிகப்பெரிய உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழாவின்(FInTech)முதல் பதிப்பானது இணைய வழியில் நடத்தப் பட்டது.
இதை இந்தியக் கொடுப்பனவு குழு (Payments Council of India) மற்றும் இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) நிதித் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் கருப்பொருள் “நிதித் தொழில்நுட்பம்: கோவிட் தொற்றுக்கு முன் மற்றும் கோவிட் தொற்றுக்குப் பின்” என்பதாகும்.
உலகளாவிய நிதித் தொழில்நுட்பம் மற்றும் வங்கிச் சேவைகள், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையை ஒன்றிணைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.