TNPSC Thervupettagam

முதலாவது ஒத்திசைவுக் கணக்கெடுப்பு

March 17 , 2023 492 days 251 0
  • தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் மேற் கொள்ளப் பட்ட முதலாவது ஒத்திசைவுக் கணக்கெடுப்பில் 246 கழுகுகள் கண்டறியப் பட்டன.
  • இந்த மூன்று மாநிலங்களில், தமிழ்நாடு மாநிலமானது கழுகுகள் அதிகம் கூடு கட்டும் இடமாகவும், தங்கும் இடமாகவும் தொடர்ந்துத் திகழ்ந்து வருகிறது.
  • முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் 98 கழுகு இனங்கள் உள்ளன.
  • இந்த 98 இனங்களில், இரண்டு எகிப்தியக் கழுகுகள் மற்றும் ஒரு இமயமலை கழுகு ஆகியவை அரிதாக தென்பட்டுள்ளன.
  • கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகங்களில் மொத்தம் 94 கழுகு இனங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் 52 கழுகு இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்