மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது விமான என்ஜின் (இயந்திர) பொருட்களுக்கான மேம்படுத்தப்பட்ட சேவைகள் தொழில்நுட்பத்தை வளர்ச்சி பெறச் செய்வதற்கு ஒரு ஆய்வகத் துறையை அமைக்க அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் குழுமமான ஜெனரல் எலக்ட்ரிக் என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
“குளிர்த் தெளிப்பு” ஸ்மார்ட் (மேற்பரப்பு மாற்றம் மற்றும் சேர்பொருள் ஆராய்ச்சித் தொழில் நுட்பங்கள்) ஆய்வகம் என்பது இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்விசார் நிறுவனங்களிலும் அமைக்கப்படாத இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வகமாகும்.
இது மேம்பட்ட உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும். இது விமான என்ஜின் பயன்பாடுகளுக்கான செயல்முறைகளை ஒருங்கிணைக்கப் பயன்படும்.
குளிர்த் தெளிப்புத் தொழில்நுட்பமானது மற்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் வெப்பத் தெளிப்பு செயல்முறைகளிலிருந்து வேறுபட்டுள்ளது. இதில் பொடிகளின் உருகுதல் தன்மை மற்றும் விஷத் தன்மை ஆகியவை இல்லை.