விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதலாவது TIDEL தொழில்நுட்பப் பூங்காவை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்தப் பூங்கா ஆனது வானூர் தாலுகாவில் அமைந்த திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 63,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, 2023-2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 7 சிறிய TIDEL பூங்காக்களை அரசாங்கம் அமைத்து வருகிறது.
தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு வரும் இது போன்ற எட்டுப் பூங்காக்களுடன், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சிறிய TIDEL பூங்காக்கள் நிறுவப் பட்டு வருகின்றன.