TNPSC Thervupettagam

முதலாவது தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு (NES)

October 14 , 2018 2105 days 722 0
  • இந்தியாவின் முதலாவது தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு (NES - National Environment Survey) ஆனது வரும் 2019 ஜனவரி மாதம் முதல் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 55 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது.
  • இது அனைத்து மாவட்டங்களையும் சுற்றுச்சூழல் செயல்திறன்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவதையும் அவற்றின் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளை ஆவணப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல் கணக்கெடுப்பின் ஆவணங்கள் 2020-ல் கிடைக்கப்பெறும்.
  • இந்த ஆய்வானது சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் (MoEFCC) அமைச்சகத்தினால் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு வழியாக நடத்தப்படும்.
  • MoEFCCயின் பசுமைத்திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்கப்பட்ட திறமையான நபர்களில் இருந்து ஆய்வுக்கு தேவையான திறமையான மனிதவளம் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்