முதலாவது பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இளஞ்சிவப்பு நிறப் பந்து
November 23 , 2019 1831 days 753 0
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வங்க தேசப் பிரதமரரான ஷேக் ஹசீனா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் வழக்கமான ஈடன் மணியை அடித்து முதலாவது பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் வழக்கமான நேரமான காலை 9:30 மணிக்குத் தொடங்காமல், இந்தப் போட்டியானது இந்திய நேரப் படி மதியம் 1 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு முடிவடைய இருக்கின்றது.
வங்க தேச அணித் தலைவர் மோமினுல் ஹக் இரு நாடுகளுக்கான “முதலாவது இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்” போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலாவது பகல்/இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடத்தப் பட்டது.
இளஞ்சிவப்பு நிறப் பந்து
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் வழக்கமாக சிவப்பு நிறப் பந்தைக் கொண்டு விளையாடப் படுகின்றன. ஆனால் பகல்/இரவு கிரிக்கெட் போட்டியில், இயற்கை ஒளி மங்கி, செயற்கை விளக்குகளைக் கொண்டு விளையாடப் படுவதால் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப் படுகின்றது.
இந்தியாவில், இளஞ்சிவப்பு நிறப் பந்துகள் உள்ளிட்ட கிரிக்கெட் பந்துகள் மீரட்டில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விநியோக நிறுவனமான சான்ஸ்பரேல்ஸ் கிரீன்லாந்து என்ற நிறுவனத்தினால் வழங்கப் படுகின்றது.