தேசிய நல்லாட்சி மையம் (NCGG) ஆனது, BIMSTEC நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான தனது முதல் பணியிடைப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இரண்டு வார அளவிலான இந்தத்திட்டத்தில் இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த துணை ஆணையர்கள், நிர்வாக உதவிச் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் உட்பட 36 மூத்த அதிகாரிகள் முக்கிய அமைச்சகங்களின் சார்பாகப் பங்கேற்றனர்.
இந்தத் திட்டமானது, பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதையும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.