TNPSC Thervupettagam

முதலாவது மரபணு மாற்றப்பட்ட கொசு

May 8 , 2021 1207 days 632 0
  • அமெரிக்காவிலுள்ள ஆக்சிடெக் எனப்படும் ஒரு உயிரித் தொழில்நுட்ப நிறுவனம்  மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின்  மீதான களச் சோதனையினை ஃபுளோரிடாவில் தொடங்கியது.
  • சிகா (zika), சிக்குன்குன்யா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொசுக்களால் பரவும் அனைத்து நோய்களுக்கும் ஏடிஸ் எஜிப்தி வகை கொசுக்களே காரணமாகும்.
  • ஆராய்ச்சியாளர்கள் ஏடிஸ் எஜிப்தி ஆண் கொசுக்களில் உயிரி பொறியியல் முறையில் (bioengineered) சில மரபணு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
  • அவை அடுத்த தலைமுறை கொசுக்களுக்கு கடத்தப்பட்டு அவற்றுள் பெண் கொசுக்களை மட்டும் ஆரம்ப கால லார்வா நிலையிலேயே அழிக்கும் மரபணு ஒன்றினை ஏடிஸ் எஜிப்தி ஆண் கொசுவினுள் அவர்கள் செலுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்