நாசா தனது முதலாவது முழுவதுமாக மின்சாரத்திலேயே இயங்கக் கூடிய “எக்ஸ் -57 மேக்ஸ்வெல்” என்ற சோதனை விமானத்தின் ஆரம்பப் பதிப்பை காட்சிப் படுத்தியுள்ளது.
மேக்ஸ்வெல் விமானமானது 14 மின்சார மோட்டார்களின் மூலம் இயங்கக் கூடியது. இந்த மோட்டார்கள் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட லித்தியம் அயன் மின்கலன்களால் இயக்கப் படுகின்றது.
தற்போதைய மின்கலன் வரம்புகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுக்காக மேக்ஸ்வெல் ஒரு விமான - டாக்ஸி அல்லது பயணிகள் விமானமாகப் பயன்படுத்தப் படலாம்.