முதலாவது முத்தரப்பு சந்திப்பு - சாபஹார் துறைமுக திட்டம்
October 26 , 2018 2223 days 762 0
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுக்கிடையேயான சாபஹார் ஒப்பந்த ஒருங்கிணைப்பு ஆணையத்தின் முதலாவது சந்திப்பு நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சாபஹார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிராந்திய மையங்களில் ஒன்றாக சாபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளுக்கிடையே சரக்குப் போக்குவரத்து மற்றும் பெருவழிப் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், எண்ணெய் வளம் மிக்க ஈரானின் தெற்குக் கடற்கரையோரமாக பயன்படத்தக்க வகையில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம் குறித்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.