முதல்வரின் புத்தாய்வு மாணவர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க மாநில அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டம் அவர்களின் பிஎச்.டி.க்கான ஆராய்ச்சிக்கு துணைபுரியும்.
Ph.D (முனைவர்) பட்டம் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மட்டுமே இந்தப் பயனைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இதற்கு எவ்வித வருமான வரம்பும் இல்லை என்பதோடு மேலும் விண்ணப்பதாரர்கள் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ Ph.D பயில்பவர்களாக இருக்க வேண்டும்.