TNPSC Thervupettagam

முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய முதல் 5 அரசாணைகள்

May 9 , 2021 1203 days 545 0
  • கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுத் தவித்து வரும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தமிழக மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 5 அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
  • பெருந்தொற்று காலங்களில் மக்களுக்கு சில நிவாரணங்கள் வழங்குவதற்காக இந்த மாநிலத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப் படும்.
  • அந்த 4000 ரூபாயில் 2000 ரூபாயானது மே மாதத்திலிலேயே வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகையானது பின்னர் வழங்கப்படும்.
  • ஆவின் பால் விலையானது லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும்.
  • மே 8 ஆம் தேதி முதல் தமிழக அரசினால் இயக்கப்படும் பேருந்துகளில் (சாதாரணக் கட்டணப் பேருந்துகள்), பணி புரியும் மகளிர் மற்றும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்காக ஒரு புதிய துறையானது உருவாக்கப்படும்.
  • தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் முதலமைச்சரின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அந்த மருத்துவமனைகளுக்கு மாநில அரசே கட்டணத்தினைச் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்