மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மற்றும் சேஹர் எனும் கலாச்சார அமைப்பின் ஒத்துழைப்போடு முதல்முறை ஆசியான் – இந்தியா இசைத்திருவிழாவை டெல்லியிலுள்ள புராணா – கிலா வில் நடத்துகிறது.
ஆசியான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவின் 25வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இந்த இசைத் திருவிழா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இசைத் திருவிழாவானது இந்தியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளின் மக்களிடையே கலாச்சார தாக்கங்களை ஊக்குவித்தலை நோக்கமாக கொண்டது.
இந்த 25வது ஆண்டு கொண்டாட்டத்தின் கருத்துரு – “பகிரப்பட்ட நெறிகள் மற்றும் பொதுவான இலக்கு".
ASEAN – Association for South – East Asian Nation.
ஆசியன் – தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
ஆசியான் என்பது தென் கிழக்கு ஆசியாவிலுள்ள 10 நாடுகளின் கூட்டமைப்பாகும்.
புருனே, கம்போடியா, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ்.