டிஜிட்டல் தடயவியல் ஆய்வக வசதிகள் கொண்ட முதல் இணைய காவல் நிலையம் ஹரியானாவின் குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த காவல் நிலையத்திற்கு ஓர் தனி மாஜிஸ்ட்ரேட் நியமிக்கப்பட உள்ளார் அனைத்து வித ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தக் குற்றங்களை கண்காணிக்கும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நிலையமாக (centralised monitoring station) இக்காவல் நிலையம் செயல்படும்.
சைபர் உலகில் உள்ள குற்றங்களை கையாளுவதற்கு நவீன சாதனங்கள் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த காவல் நிலையத்தில் பணியமர்த்தப்படுவர்.