TNPSC Thervupettagam

முதல் இந்திய – அமெரிக்க பெருங்கடல் பேச்சுவார்த்தை

November 2 , 2017 2611 days 863 0
  • முதன்முறையாக இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான முதல் பெருங்கடல் பேச்சுவார்த்தை கோவாவில் நவம்பர்-1 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
  • இப்பேச்சுவார்த்தையானது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் (Council of Scientific and Industrial Research) கோவாவிலுள்ள தேசிய பெருங்கடலியல் ஆய்வு மையத்தில் (National Institute of Oceanography) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது
  • நீலப் பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்த பெருங்கடல் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
  • உலக வங்கியின் கருத்துப்படி, நீலப் பொருளாதாரம் என்பது பெருங்கடலின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சி, மக்களின் மேம்பட்ட வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக்காக பெருங்கடல் வளத்தை நீடித்த முறையில் பயன்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்