முதன்முறையாக இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான முதல் பெருங்கடல் பேச்சுவார்த்தை கோவாவில் நவம்பர்-1 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தையானது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் (Council of Scientific and Industrial Research) கோவாவிலுள்ள தேசிய பெருங்கடலியல் ஆய்வு மையத்தில் (National Institute of Oceanography) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது
நீலப் பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்த பெருங்கடல் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
உலக வங்கியின் கருத்துப்படி, நீலப் பொருளாதாரம் என்பது பெருங்கடலின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சி, மக்களின் மேம்பட்ட வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக்காக பெருங்கடல் வளத்தை நீடித்த முறையில் பயன்படுத்துவதாகும்.