பவன் சிங் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான நடுவராக (juror) நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இவர் இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் (ரைஃபில்) போட்டிக் கழகத்தின் இணைத் தலைமைச் செயலாளர் ஆவார்.
இவர் சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி குழுவினுடைய உலகக் கோப்பைப் போட்டியின் மேலாளராக இருந்தார்.
நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 26 நடுவர்கள் அடங்கிய ஒரு குழுவானது இந்தப் போட்டிகளை மேற்பார்வையிடும்.
இதில் 6 நபர்கள் ஜப்பானையும் மற்றவர்கள் இதர நாடுகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.