இதற்கு முன்னர் மும்பை பங்குச் சந்தை என அழைக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தை லிமிடெட் (Bombay Stock Exchange Ltd – BSE) வரையறுக்கப்பட்ட கடல் தாண்டிய சந்தை (Designated Offshore Securities Market - DOSM) என அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனத்தினால் (United States Securities and Exchange Commission - US-SEC) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இந்த தகுதியைப் பெறும் முதல் இந்திய பரிவர்த்தனை நிறுவனம் BSE ஆகும்.
DOSM அந்தஸ்து ஆனது, BSE–ன் வர்த்தக இடத்திலிருந்தே (Trading Point) அமெரிக்க வர்த்தக முதலீட்டாளர்களுக்கு US SECயின் அனுமதியில்லாமல் பங்குகளை விற்பனை செய்ய அனுமதியளிக்கிறது.
இந்த வழிமுறையானது, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவதோடு அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவின் வைப்புத் தொகை பற்றுச்சீட்டுகள் (Indian Depository Receipts - IDRs) மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது.
BSE என்பது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், தலால் தெருவில் அமைந்துள்ள இந்திய பங்குச் சந்தை ஆகும். 1875-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட BSE ஆசியாவின் முதல் பங்குச் சந்தை ஆகும்.
ISO 9001: 2000 எனும் தரச்சான்றை பெறும் முதல் இந்திய மற்றும் உலகின் இரண்டாவது பங்குச் சந்தை BSE ஆகும்.
மேலும், அதன் இணைய வர்த்தக அமைப்பிற்காக தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பின் தரநிர்ணயமான BS 7799-2-2002 சான்றைப் பெறும் முதல் இந்திய மற்றும் உலகின் இரண்டாவது பங்குச் சந்தை BSE ஆகும்.