TNPSC Thervupettagam

முதல் இழப்பு இயல்புநிலை உத்தரவாதம்

June 20 , 2023 523 days 302 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, முதல் இழப்பு இயல்புநிலை உத்தரவாதக் கட்டமைப்பிற்கு (FLDG) தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, இந்திய நிதிசார் தொழில்நுட்ப வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைய வழி வகுக்கிறது.
  • இந்த முடிவானது தரவு-தொழில்நுட்பம் சார்ந்த வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மிகவும் ஒரு சாதகமான நடவடிக்கையாக  பார்க்கப் படுகிறது.
  • மேலும், இந்த நடவடிக்கையானது எண்ணிமக் கடன் வழங்கீட்டுச் சூழலை நன்கு வலுப் படுத்தும்.
  • இது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) மற்றும் கடன் வழங்கீட்டுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் (LSPs) அல்லது இரண்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையேயான இயல்புநிலை இழப்பு உத்தரவாத நடவடிக்கையானது (DLG) பொதுவாக FLDG என அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்