TNPSC Thervupettagam

முதல் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு

May 15 , 2018 2387 days 800 0
  • உலக வனஉயிர் நிதியம் – இந்தியா {World Wildlife Fund (WWF)-India} அமைப்புடன் இணைந்து பஞ்சாப் மாநில அரசானது சிந்துநதி டால்பின்களின் (Indus Dolphins) முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
  • சிந்துநதி டால்பின்களானது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படும் உலகின் மிகவும் அரிதான பாலூட்டிகளில் ஒன்றாகும்.
  • பஞ்சாப் மாநிலத்தின் பியாஸ் நதியில் (Beas River) உள்ள தல்வாரா மற்றும் ஹரிகே அணைக்கட்டிற்கிடையேயான (Talwara and Harike Barrage) 185 கிலோ மீட்டர் நீள நதிப் படுகையில் 5 நாட்களுக்கு இந்த முதல் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பகுதியில் மட்டுமே நதிவாழ் நன்னீர் சிந்துநதி டால்பின்கள் (riverine fresh water Indus Dolphins) காணப்படுகின்றன.

  • நதிவாழ் நன்னீர் டால்பின்களின் (freshwater river dolphin) துணை இனமே சிந்துநதி டால்பின்களாகும். இந்தியாவின் கங்கைநதி டால்பின்களும் (Ganges River dolphin) நன்னீர்வாழ் டால்பின்களின் துணை இனமாகும்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியே பாய்கின்ற சிந்துநதி மற்றும் அதன் துணை நதிகளான பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில் சிந்துநதி டால்பின்கள் காணப்படுகின்றன.
  • சிந்துநதி டால்பின்களானது பாகிஸ்தானின் தேசியப் பாலூட்டியாகும் (national mammal of Pakistan). இவை நதியினுடைய சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் முக்கிய குறியீட்டு இனமாகும் (key indicator species of river’s health).
  • சர்வதேச பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் சிந்துநதி டால்பின்களானது அதனுடைய அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சிவப்பு பட்டியலில் (Red List of Threatened Species) அருகிவரும் இனமாக (endangered Species) பட்டியலிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்