முதல் கருந்துளை மும்மை அமைப்பு
November 5 , 2024
17 days
103
- இயற்பியலாளர்கள் முதன்முறையாக ஒரு "கருந்துளை மும்மை" என்ற அமைப்பினை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- இது ஒரு மைய கருந்துளை, அதைச் சுற்றி நெருக்கமாகச் சுழலும் நட்சத்திரம் ஒன்று, மேலும் ஒரு தொலைதூர நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- இதில் அண்மை நட்சத்திரம் ஆனது கருந்துளையை 6.5 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
- இரண்டாவது மற்றும் நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திரம் ஆனது அதன் சுற்றுப் பாதையை நிறைவு செய்ய சுமார் 70,000 ஆண்டுகள் ஆகும்.
- இது சிக்னஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
- இந்த அமைப்பு ஆனது பூமியிலிருந்து சுமார் 8,000 ஒளி ஆண்டுகள் என்ற தொலைவில் அமைந்துள்ளது.
- V404 சிக்னி எனப்படும் மைய கருந்துளையானது, நமது சூரியனை விட ஒன்பது மடங்கு அதிக நிறை கொண்டது.
Post Views:
103