முதல் காலாண்டில் பதிவான நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 2025
August 26 , 2024 89 days 116 0
2024 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான (Q1 FY25) காலாண்டில் 6.6 சதவீதமாக இருந்த, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நகர்ப்புற தனிநபர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்து மாறாமல் அதே அளவில் உள்ளது.
ஜூன் 30 ஆம் தேதியன்று நிறைவடைந்த காலாண்டில் இந்தியாவின் வேலை வாய்ப்பு இன்மை விகிதம் ஆனது 2024 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டிலிருந்து (6.7 சதவீதமாக இருந்தது) குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டில் ஆண்கள் மத்தியில் சுமார் 5.9 சதவீதமாக பதிவான வேலை வாய்ப்பின்மை விகிதம் (UR) ஆனது, 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெண்கள் மத்தியில் 9.1 சதவீதமாக இருந்த பதிவாகியிருந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 9.0 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு வரை, ஆண்கள் மத்தியில் பதிவான வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது சுமார் 5.9 சதவீதமாகவும், பெண்கள் மத்தியில் பதிவான வேலைவாய்ப்பின்மை விகிதமானது 9.1 சதவீதமாகவும், ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.6 சதவீதமாகவும் இருந்தது.