TNPSC Thervupettagam

முதல் சர்வதேச சாலை கட்டுமானத் திட்டம்

April 24 , 2018 2280 days 679 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (National Highways Authority of India (NHAI) மியான்மரில் உள்ள யாக்யி – கலேவா நெடுஞ்சாலைப் பிரிவை (Yagyi – Kalewa section) இந்தியாவின் கிழக்குப் பகுதியோடு இணைந்த இருவழிப்பாதையாக (two lane)  மேம்படுத்துவதற்கு மியான்மர் அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளது.
  • இத்திட்டமானது இந்தியா – மியான்மர் – தாய்லாந்து ஆகியவற்றிற்கிடையேயான முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தின் {India-Myanmar-Thailand (IMT) Trilateral Highway} ஒரு பகுதியாகும். மேலும் இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்   முதல் சர்வதேச திட்டம் ஆகும்.
  • தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான இணைப்பினை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் கிழக்கு செயற்பாட்டு கொள்கையின் (Act East policy)  கீழ்  கட்டப்பட்டு வரும் பிராந்திய நெடுஞ்சாலையே IMT முத்தரப்பு நெடுஞ்சாலையாகும்.
  • இந்த நெடுஞ்சாலையானது மியான்மரின் வழியே இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மோரெ (Moreh) பகுதியை தாய்லாந்து நாட்டின் மே சோட் (Mae- Sot) பகுதியுடன் இணைக்கும்.
  • இந்த நெடுஞ்சாலையானது ஆசியான் – இந்தியா தடையற்ற வர்த்தக பகுதிகளிலும் (ASEAN–India Free Trade Area), அதனோடு பிற தென்கிழக்காசியப் பகுதிகளிலும் (Southeast Asia)  வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்திய அரசின் மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தினால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.
  • 1177 கோடி ரூபாய் செலவில் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் எனும் முறையின் (Engineering, Procurement and Construction Mode - EPC mode) அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்