TNPSC Thervupettagam

முதல் ஜூராசிக் சகாப்தமான ‘பிஷ் லிசார்டு’ படிமம் - இந்தியாவில் கண்டுபிடிப்பு

October 27 , 2017 2633 days 951 0
  • இந்தியாவின் புதைபடிமவியல் வரலாற்றில் முதல் முறையாக 150 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த இயற்கையிலிருந்து மறைந்த கடல்வாழ் ஊர்வன உயிரினமான இச்தையோசவுரின் புதைப்படிமங்கள் குஜராத்தின் கட்ச்பகுதியில் இந்தியா மற்றும் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • 5 மீட்டர் நீளமுடைய இப்புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள இச்தையோசவுர் உயிரினமானது ஆப்தல்மோசெனரிடே குடும்பத்தைச் சார்ந்தது. இவை 165 முதல் 9 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்க கூடும்.
  • கட்ச் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள 252 முதல் 66 மில்லியன் வருடப்பழமையான மேசொஜோயிக் சகாப்த பாறைகளின் உள்ளே இந்தப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இதுவே இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள முதல் ஜூராசிக் இச்தையோசவுர் வகையாகும். இதற்குமுன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் இவை கண்டறியப்பட்டன.
  • இந்தியாவின் பழமையான புதைப்படிவமான, 1:6 பில்லியன் வருட பழமையுடைய சிவப்பு பாசிகளின் புதைமடிமம் இதற்குமுன் மத்தியபிரதேசத்தின் சித்திரகூட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது இந்த வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது முக்கிய புதைபடிம கண்டுபிடிப்பாகும்.
  • இவற்றின் பல்வரிசை அமைப்பானது அவைகள் வாழ்ந்த சுற்றுச் சூழலியல் காலத்தில் உயர்மட்ட வேட்டை விலங்காகவும், பிற விலங்கினங்களை உண்ணும் விலங்காகவும் இருந்ததை உரைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்